யூதர்கள் இயேசு கிறிஸ்துவை கடவுளாக ஏற்றுக்கொள்ளாமைக்கு காரணங்கள் பல இருந்தாலும் அதில் முக்கிய காரணம், அவர் சாதாரண மனித உருவில் வந்தது ஆகும். கடவுளுக்கு உருவம் இல்லை என்ற தவறான எண்ணமே யூதர்களை நம்பிக்கை அற்றவர்களாக மாற்றி விட்டது. அவர் யோசேப்பு என்கிற தச்சன் மகன் என்றும் அவருக்கு சகோதரர்களும் சகோதரிகளும் உள்ளார்களே என்றும் சொல்லி அவரை புறக்கணித்தனர் (மாற். 6:3) ஆகையால் ஆசீர்வாதத்தை இழந்தனர்.
யூத மதத்தை தழுவி வந்த இந்து மதமும் (பிற்காலத்தில்) கடவுளுக்கு உருவம் உண்டு என்று இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் இருந்து அறிந்து கொண்டு, எல்லா உருவிலும் கடவுள் இருக்கிறார் என்ற தவறான எண்ணம் கொண்டு (அவருக்கு என்று ஒரு குறிப்பிட்ட உருவம் இல்லை என்ற எண்ணம் கொண்டு) 'முப்பது முக்கோடி தேவர்கள்' என்று சொல்லி தங்களுக்கு விருப்பமான உருவங்களை வழிபடலாயினர். இது பிதாவாகிய தேவனுக்கு விரோதமான விக்கிரக ஆராதனை உருவாக காரணமாயிருந்தது.
அதேபோல், மற்றொருபுறம் யூத மதத்தை தழுவி வந்த இஸ்ஸாம் மதமும் இயேசுவை கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு காரணம் :
- அவர் மனித உருவில் இருந்ததினால்
- அவர் கடவுளுடைய குமாரன் என்று சொன்னதினால்
- அவருக்கு பிறப்பு, இறப்பு இருந்ததினால், யூதர்களை போல இஸ்லாம் மார்க்கத்தாரும் இயேசுவை ஒரு புனித மகானாக அதாவது மோசேயைப்போல, தாவீதைப் போல பார்த்தார்களே தவிர அவரை ஆண்டவராகவே (அல்லது) இரட்சகராகவோ (அல்லது) இறைவனாகவோ கண்டு கொள்ளவில்லை. ஆதலால் ஆசீர்வாதத்தை இழந்தனர்.