பரிசுத்த ஆவியானவர் - ஒரு விளக்கம்

இதிலிருந்து நாம் உண்மையான மனிதர்கள் அல்ல என்றும், அவரை போன்ற சாயலிலே மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டவர்கள் என்றும் ஆதியாகமம் கூறுகிறது (ஆதி.2;7). நாமும் அவரை போல உண்மையான மனிதனாக, மனுஷியாக மாற வேண்டும் என்பது ஆண்டவரின் சித்தம். அதற்காகவே அவர் இந்த பூமிக்கு வந்தார் என்று வேதாகமம் கூறுகிறது. அவர் நாமத்தின் பேரில் எத்தனைப் பேர் விசுவாசம் வைக்கிறார்களோ அவர்கள் அத்தனைப்பேரும் உண்மையான மனுஷனும், மனுஷியுமாய் மாறுகிறார்கள் என்று பரிசுத்த வேதாகமம் அறுதியிட்டு கூறுகிறது.

 ஆகவே இயேசு கிறிஸ்து இந்த உலகில் மனிதனாக வாழ்ந்த காலத்திலும் அவர் ஆவியிலும், மனித வடிவிலும் இருந்தார். அவரை எல்லோரும் கண்டார்கள். அவரை தொட்டு பார்த்தார்கள். அவருடைய வார்த்தைகளை கேட்டார்கள். அவர் கடவுளாக இருந்தாலும் மனிதனோடு ஒரு சாதாரண மனிதனாக தன்னை வெளிப்படுத்தினார். இதை நேரடியாக கூறவேண்டுமானால், பிதாவாகிய தேவனுடைய ஏக மைந்தன், அதாவது குமாரனாகிய தேவன் (அல்லது) இறைவன், அவரே ஒரு குழந்தையாக மாறி எல்லோரும் காணக்கூடிய வகையிலே பிறந்து, வளர்ந்தார். ஆகையினாலே அவர் இந்த உலகில் மனிதனாக காணப்பட்டது 2000ஆம் ஆண்டுகளுக்கு முன் இருந்தாலும் அவர் பிறப்பு அநாதியானது. எனவே அவரது உலகப் பிறப்பை நாம் பிறப்பு என்று சொல்வதை காட்டிலும் வருகை என்று சொன்னால் அது மிகையாகாது.

பரிசுத்த மேனியையும் பரிசுத்த ஆவியையும் உடையவராக இயேசு கிறிஸ்து இந்த உலகிற்கு வந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர் முப்பது வயதுவரை உலகுக்கு தன்னை வெளிப்படுத்தாமல் இருந்தார். பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. அவர் தன் முப்பதாவது வயதில் ஞானஸ்நானம் பெற்றபோது அவர் மேல் தேவ ஆவியானவர் (அல்லது) பிதாவின் ஆவியானவர் புறாவைப்போல இறங்கினார் என்று. இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியும், பரிசுத்த மேனியும் உடையவராக இருக்கும் நேரத்தில் பிதாவாகிய தேவனுடைய ஆவியானவர் அவர் மேல் இறங்கினார். அது முதல் இயேசு கிறிஸ்து சுவிசேஷத்தை பிரசங்கித்தார், நன்மை செய்கிறவராய் சுற்றி திரிந்தார், தன் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற சிலுவையில் அறையப்பட்டார், மூன்றாம் நாள் மரணத்தை வென்று உயிரோடெழுந்தார். இயேசு உயிரோடெழுந்த பின்பு சீஷர்கள் பூட்டின அறைக்குள் இருக்கையில், அவர் உட்பிரவேசித்து உங்களுக்கு சமாதானம் என்றார். சீஷர்கள் அவரை கண்டு பயந்த போது, அவர் அவர்களிடம் நெருங்கி வந்து தன்னுடைய காயங்களையும், தன்னையும் காட்டி என்னைப் போல கைகளும் கால்களும் ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி தான் ஆவியாயும் மேனியாயும் இருப்பதை காண்பித்தார். இப்படியே அவர் இன்னும் பிதாவினிடத்தில் இருக்கிறார். நமக்கு இரட்சிப்பை சம்பாதித்தார்! அல்லேலூயா!!

இதிலிருந்து நமக்கு ஒரு உண்மை புலப்படுகிறது. அதாவது இயேசு கிறிஸ்துவின் ஆவியும் பிதாவாகிய தேவனின் ஆவியும் இணைந்த ஒன்றே பரிசுத்த ஆவியானவர் என்று! எங்கே கிறிஸ்துவின் ஆவி உண்டோ அங்கே பிதாவாகிய தேவனின் ஆவியும் வருவார்!! எங்கே கிறிஸ்துவின் ஆவி இல்லையோ, அங்கே தேவனுடைய ஆவியும் இராது!!!

அன்பார்ந்தவர்களே, பரிசுத்த ஆவி உங்களில் காணப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி அவருடைய ஆவிக்காக மன்றாடி காத்திருங்கள். அப்பொழுது பிதாவாகிய தேவன் தன் குமாரனின் ஆவியோடு ஒருசேர பரிசுத்த ஆவியானவராக வந்து உங்கள் உள்ளத்தில் வாசம் பண்ணுவார். அப்பொழுது நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய், நன்மை செய்கிறவர்களாய், பிதாவின் சித்தத்தை இயேசு கிறிஸ்துவைப்போல நிறைவேற்றுபவர்களாய் மாறி மிகுந்த கனிகளை கொடுத்து கிறிஸ்துவை பின்பற்றி நீங்களும் மகிமை அடைவீர்கள்.

தமிழ்