என் பிதாவின் சித்தத்தை செய்வதே எனக்கு போஜனமாயிருக்கிறது என்றும் என் பிதாவின் சித்தத்தை செய்யவே நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன் என்றும் ( யோ. 6 : 38 ), பிதாவே, இந்த பாத்திரம் என்னைவிட்டு நீங்க கூடுமானால் நீங்கட்டும், ஆனாலும் என்னுடைய சித்தத்தின்படி அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது ( மத். 26:39 ) என்றும், இயேசு கிறிஸ்து தாமே ( மாற். 14:36 ) சுவிசேஷத்தில் கூறுகிறார். அதாவது இயேசு கிறிஸ்து தன் பிதாவின் சித்தத்தை மட்டுமே செய்பவர் என்று அறிந்து கொள்வது. நானும் பிதாவும் ஒன்றா இருக்கிறோம், ( யோ. 10:30 ) என்னைக் கண்டவன் என் பிதாவைக் கண்டான்.( யோ. 14 : 9 ) போன்ற வசனங்கள் இதை உறுதி செகின்றன, கர்த்தராகிய இயேசு இவ்வுலகில் மனிதனாக காணப்பட்டு வாழ்ந்த காலத்தில் மட்டும்தான், அவர் தன் பிதாவின் சித்தத்தை செய்தார் என்று சொன்னால் அது தவறு. ஆதி முதற் கொண்டு இன்று வரையிலும் மட்டுமல்ல, இனி வரப்போகும் முடிவு காலத்திற்கு பிற்பாடும் அவர் தன் பிதாவின் சித்தத்தை செய்பவர் என்று அறிந்து கொள்வது.
இதற்கு எடுத்துக்காட்டு:
- மனிதன் பாவத்தில் விழும்படியாக நன்மை தீமை அறியும் மரத்தை வைத்ததும் (ஆதி. 2:9) அவரே பின்பு அவன் பாவத்தில் விழுந்த பின்போ, அவனுக்காக மனஸ்தாபப்பட்டதும் அவரே, (ஆதி. 6:7) பிதாவாகிய தேவனின் கிருபை கிறிஸ்து இயேசுவில் பெருகும்படிக்கு பாவமாகிய சேற்றில் மனிதரை தள்ளும்படி பிதாவாகிய தேவனின் சித்தம் இருந்தது. இருப்பினும் பிதாவின் சித்தத்தை மட்டும் அவர் செய்பவராக இருப்பதால் அம்மரத்தை வைத்தார்.
- தாவீது தன் மகன் வியாதிப்பட்டு இருக்கும்போது உபாவாசம் இருந்து ஜெபம் பண்ணினான். ஆனால் அவன் மகன் இறந்த போதோ அவன் உபவாசத்தை விட்டு புசித்து குடித்தான். அவர் சொன்னது; 'இன்று என் மகனை கர்த்தர் எடுத்துக் கொண்டாலும் ஒருநாள் அவனை என் முன் கொண்டு வருவார். அன்று நாங்கள் ஒருவரை ஒருவர் முகமுகமாய் சந்திப்போம்' என்றான் (2 சாமு. 12:16 - 23 ). ஆம், நாம் இந்த உலகில் செய்யும் ஜெபங்களுக்கு கர்த்தர் உடனடியாக பதில் அளிப்பது இல்லை, அதற்கு காரணம், அவர் தன் பிதாவின் சித்தத்திற்கு கட்டுப்பட்டவர் (அல்லது) சித்தத்தை செய்பவர் என்பதே.
- என்னை நோக்கி "கர்த்தாவே கர்த்தாவே!!" என்று சொல்லுகிறவன் அல்ல, என் பிதாவின் சித்தத்தை செய்பவனே பரலோக இராஜ்யத்தில் பிரவேசிப்பான் (மத். 7 : 21) என்ற வசனமும் இதை உறுதி செகின்றன.
இன்னும் நீங்கள் வேதாகமத்தில் இதற்கு அநேக எடுத்துகாட்டுகளை காணமுடியும். சகலத்தையும் தன் குமாரன் இயேசு கிறிஸ்து வழியாகவே உண்டாக்கிய பிதாவாகிய தேவன் இரட்சிப்பையும் தன் குமாரன் வழியாக மட்டுமே உண்டாக்கி ( அப்போ. 16:31 ) இனி வரப்போகும் நியாய தீர்ப்புக்கும், நித்திய ஜீவனுக்கும் அதிகாரியாகவும், ராஜாவாகவும் ஏற்படுத்தினார் என்று அறிந்து கொள்வது ( மத்.16:27: வெளி. 22:12: மத் 25:31 ).
கடைசியாக, கிறிஸ்துவின் ஆவியை பெற்று கொண்ட மக்களாக நாம் வாழ நம்மை பிதாவாகிய தேவன் அழைக்கிறார் என்று அறிந்து கொள்வது. அதாவது கிறிஸ்துவின் ஆவியை பெற்று கொள்ளும்போது மட்டுமே நாம் பிதாவாகிய தேவனுக்கு பிள்ளைகளாக இருக்க முடியும். ஏனெனில் இயேசு கிறிஸ்து ஒருவரே பிதாவாகிய தேவனுடைய பிள்ளை (மாற். 1:11) நாம் அவருடைய பிள்ளைகளா இராவிட்டாலும் தன் ஒரே பேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராகவும், மீட்பராகவும், தெவமாகவும் என்று விவாசம் கொண்டவர்கள் எத்தனை பேர்களே அத்தனை பேர்களும் தன் சொந்த குமாரர்களும், குமாரத்திகளுமாய் பிதா தாமே ஏற்று கொள்ளுகிறார் என்று அறிந்து கொள்வது (யோ. 1:12).
நம்முடைய கர்த்தராகிய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை ஆன்மீக ரீதியில் புரிந்துகொள்ள ஏழு படிகள் இவை.
மேலும் இயேசு கிறிஸ்துவைக் குறித்து அறிந்து கொண்ட நாம், பிதாவையும் அவருடைய ஆவியையும் குறித்து அறிந்து கொள்வது மிக மிக அவசியம். ஏனென்றால் கிறிஸ்துவின் ஆவியை உடையவர்களாய் நாம் வாழும் பொழுது நமக்கு பல சோதனைகள் வரலாம். அத்தகைய சோதனைகளின்று நம்மை விடுவித்து நம்மை கிறிஸ்துவின் பாதையில் நடத்திட பிதாவாகிய தேவன் தாமும் ஆவியானவராக (அல்லது) தேற்றரவாளனாக வந்து நமக்கு ஒத்தாசை செய்கிறார். ஆகவே பிதாவாகிய தேவனுடைய ரூபம் என்ன? அவருடைய சித்தம் என்ன? என்பதையும் அறிந்து கொள்ளுதல் அவசியம்.