என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்( யோ. 14;28 ) என்றும் என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்? ( மத். 27:46 ) என்றும், அந்த நாழிகையையாவது அந்த வேளையாவது என் பிதா ஒருவர் தவிர மற்றொருவரும் அறியார். பரலோகத்தில் உள்ள தூதர்களும் அறியார்கள். குமாரனும் அறியார் என்றும் ( மாற். 13:32 ) போன்ற வசனங்களிலிருந்து பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவை காட்டிலும் சற்று பெரியவர் என்று அறிந்து கொள்வது. ( 1 கொரி. 15: 27, 28 ) ஆபிரகாம் மோரிய மலையிலே ஈசாக்கை பலியிடும்படியாக தன் கத்தியை ஓங்கினபோது, யெகோவாவாகிய கிறிஸ்து அதை தடுத்துதான் கொல்காதா மலையிலே தன் பிதாவினால் பலியாகபோவதே ஒரே பரிசுத்த பலி ( 1 யோ. 2:2 ) என்று நமக்கு கட்டிடவே, பார்வைக்கு அவர் மனிதர்களால் கொல்லப்பட்டது போல் காணப்பட்டாலும், அவர் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டது. பிதாவாகிய தேவனால். நம் எல்லோருடைய அக்கிரமத்தையும் கர்த்தர் (பிதா) அவர் (கிறிஸ்து) மேல் விழப்பண்ணினார் என்று வேதாகமம் கூறுகிறது. நம் பாவங்களைப்போக்குகின்ற ஆக்கினை அவர் மேல் வந்தது. (அதாவது மரணம் அவரைத் தழுவியது) பிதாவாகிய தேவன் தாமே நம் எல்லோருடைய அக்கிரம் செய்கையின் பலனாகிய மரணத்தை அவர் மேல் விழப்பண்ணினார் ( ஏசா. 53:6; 2 கொரி. 5:21 ). பிதா தாமே குமாரனைக்காட்டிலும் பெரியவராயிருப்பதினால் இவற்றையெல்லாம் செய்து பின்பு தன் குமாரனை மூன்றாம் நாளில் உயிர்த்தெழவும் செய்தார்( கலா. 1:1; ரோ. 10: 9 ).
பிதா தாமே தன்னில்தாமே ஜீவனுள்ளவராய் இருக்கிறது போல குமாரனும் தன்னில்தானே ஜீவனுள்ளவராய் இருக்கும்படிக்கு அருள் செதிருக்கிறார் ( யோ. 5: 26) என்று யோவான் சுவிசேஷத்தில் குறிப்பிடுகின்றார். ஆகவே பிதாவும் குமாரனும் தனித்தன்மை உடையவர்கள் என்று அறிந்து கொள்வது, ஆதாமும் ஏவாளும் ஒரே மாம்சமானவர்கள் ( ஆதி. 2 : 23 ). அவர்கள் இரு வரும் தனித்தன்மை உடையவர்களாய் இருந்தார்கள். அதே போலவே பிதாவும் குமாரனும் தனித்தன்மை உடையவர்கள் ( யோ.5 : 26 ), மனிதனை பிதாவுக்கும், மனுஷியை குமாரனுக்கும் நாம் ஒப்பிட்டு பார்த்தால், இயேசு கிறிஸ்துவை நாம் அறிந்துக்கொள்ள அது உதவியாயிருக்கும் ( எபே. 5:31. 32 ). ஏவாளின் வழியா பாவம் வந்தது. ஆனால் ஏவாளுக்கு ஒப்பானவராய் இருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய் பாவத்திலிருந்து மீட்பு வந்தது. ஆணிலிருந்து (ஆதாமிலிருந்து) (ஏவாள்) தோன்றினாலும் அதற்கு பிறகு வந்த மனுகுலம் அனைத்தும் பெண்ணிலிருந்து தோன்றினவைகளாகும். அதை போலவே பிதாவிலிருந்து குமாரன் பிறந்திருந்தாலும், சகலவற்றையும் உண்டாக்கினவர், குமாரனே, ஆண் இல்லாமல் ஒரு பெண் பிள்ளை பெற முடியாதது போல குமாரனும் தான் சிருஷ்டித்த எல்லாவற்றையும் பிதாவின் சித்தத்தினாலே மாத்திரமே சிருஷ்டித்தார், ஏவாள் கர்ப்பமாகி வேதனையோடே பிள்ளை பெறுவாள் என்ற வாக்கியம் (ஆதி. 3: 16) இயேசுவில் நிறைவேறியதாகவே நாம் காண்கிறோம், அவர் மீட்பு என்ற குழந்தையை பெற சிலுவை என்ற தேவ கோபாக்கிணையை தன் மேல் ஏற்று கொண்டார். முடிந்தது என்ற வார்த்தையும் இதனையே நமக்கு காட்டுகிறது. நமக்கு தகப்பன் பிதாவாகவும் தாய் இயேசு கிறிஸ்துவாகவும் இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. ஒரு குழந்தை பிறந்து வளரும் பொழுது அது முதலாவது தாயையே தெரிந்துகொண்டு பின்பு தந்தையை தெரிந்து கொள்கிறது. அதைப்போலவே இயேசு கிறிஸ்துவின் வழியில் மட்டுமே நாம் பிதாவை சேர முடியும்.