கர்த்தரை நம்புங்கள்

  • மனித உருவில் வந்த கடவுள் (அல்லது) கடவுளுடைய மைந்தன் என்றும்,
  • பிறப்பு, இறப்பு இல்லாத அவர் நம்முடைய பாவங்களை போக்குவதற்காக பிறப்பு, இறப்பு என்ற இந்த இரண்டு நிலைகளையும் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படி எடுத்தார் என்றும்,
  • அவர் ஒரு புனித மகான் அல்ல, இயேசுவே இறைவன் (அல்லது) இறைமகன் என்றும்,
  • பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படி அவர் மரணத்திற்குள் சென்று மரணத்தை வென்று உயிரொடெழுந்தார் என்றும்,
  • அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் பிதாவின் மடியில் வீற்றிருந்து சர்வத்தையும் ஆளுகை செய்கிறார் என்றும்,(எபி. 13: 8; வெளி. 21 - 5; நீதி. 8:30)
  • அவர் கர்த்தாதி கர்த்தராக, இராஜாதி இராஜனாக நியாயாதிபதியாக மீண்டும் வந்து, அவனவன் கிரியைக்குத் தக்கதாக (மோட்சம், நரகம்) பலனை அளிப்பார் என்றும், எவர்கள் விசுவாசிக்கின்றார்களோ அவர்கள் மட்டுமே பிதாவாகிய தேவனுடைய பிள்ளைகளாகி பரலோக இராச்சியம் செல்ல முடியும் என்று பரிசுத்த வேதாகமம் திட்டமும் தெளிவுமாக கூறுகிறது. ஆகவே கிறிஸ்தவர்களாகிய நாம் இத்தகைய மெய் விசுவாசத்தில் நிலைத்திருக்க கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.
தமிழ்