விசுவாசத்தின் அவசியம்

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதருக்கு காணப்பட்டு வாழ்த்த காலத்தில், ஒருவன் அவரிடத்தில் வந்து, போதகரே, கற்பனைகள் எல்லாவற்றிலும் பெரிய ( அல்லது ) சிறந்த கற்பனை எது? என்று கேட்டான். அதற்கு அவர், இஸ்ரவேலே, கேள். உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். அவரில் நீ உன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் அன்பு கூறுவாயாக என்பதே முதல் பிரதான கற்பனையாய் இருக்கிறது. இதற்கு ஒப்பாய் இருக்கிற இரண்டாம் கற்பனை என்னவெனில் நீ உன்னில் அன்பு கூறுகிறது போல உன் அயலானிடத்திலும் அன்பு கூறுவாயாக என்பதே என்றார் (மாற் 12:28-31) மற்றும் (மத் . 22:36-39). அதாவது பத்து கற்பனைகளில் (யாத். 20 1-7) முதல் மூன்று கற்பனைகள் நாம் கர்த்தரிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்றும், அடுத்த ஏழு கற்பனைகள் நாம் நம் அயலாரிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்றும் கூறுகிறது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் காரியம் என்ன ? முதலாவது நாம் பிதாவாகிய தேவனிடத்திலும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடத்திலும் அன்பு கூறுவதே பிரதானமானது ( அல்லது ) அடிப்படையானது. அதாவது பிதாவினிடத்திலும், இயேசு கிறிஸ்துவிடத்திலும் நாம் விசுவாசம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்பதே( யோவான் 14:1, 1 யோவான் 5:5)

ஒவ்வொரு மனிதனும் சுபாவத்தின்படி அன்பு இல்லாதவன் ( பாவம் நிறைந்தவன் ) என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது (சங். 51:5, யோ. 1:8-10, ரோ. 5:8, ரோ. 3:23). சுபாவத்தின்படி அன்பு இல்லாதவர்களாகிய நாம் விசுவாசத்தின் மூலம், அதாவது

நாம் அவரோடேகூட பரலோகத்தில் நித்திய காலமாய் வாழ அவர் மீண்டும் வந்து நம்மை அழைக்கிறவராய் இறுக்கிறார் என்றும் ( யோ. 14:3 ), விசுவாசத்தின் வழியாக சுபாவ அன்பை பெற்று தேவனுக்கு பிரியமான மக்களாக வாழ இயலும் ( ரோ. 3:22 ).

அவரே நம்முடைய பாவங்களை நீக்குகிற கிருபாதார பலி என்றும் ( மாற். 2:10, யோ. 1:26 )

நம்மை வழி நடத்த ஆவியாவரை அனுப்புகிறவாகவும் இருக்கிறார் என்றும் ( மாற். 1:8, 1 யோ. 2:27 , லூக். 3:16, யோ. 14:16 )

இன்றும் நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுபவராக ( 1 யோ. 2:1 )

இயேசு கிறிஸ்துவே தேவ குமாரன் ( மத். 27:54 ) ( லூக். 1:32 )

" விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம் " என்று பவுல் அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார் ( எபி. 11: 6 ). இயேசு கிறிஸ்துவும் என்னை விசுவாசிக்கிறவன் மரித்தலும் பிழைப்பான், உயிரோடு இருந்து என்னை விசுவாசிக்கிறவன் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பன் என்றார் ( யோ. 11: 25-26). ஆகவே மேற்கூறிய விசுவாசம் மட்டுமே மனிதரை தேவனோட இணைக்கிறது ( அல்லது ) இணைத்து விடுகிறது. ( கலா. 2:15, ரோ. 14: 23 ).

விசுவாசம் என்பது தேவன் மனிதருக்கு அருளும் ஈவுகளில் மிக சிறந்த ஈவாகும். தேவனே, இயேசு கிறிஸ்துவின் வழியாக, விசுவாசத்தை துவங்குகிறவரும் ( எபி. 12: 1 ), அதை முடிவு மட்டும் நம்மிடத்தில் காக்கிறவருமாய் இருக்கிறார் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. இத்தகைய விசுவாசத்தை பெற்று அதிலே நிலைத்து இருக்கவும் ( மத். 24:13 ) வளரவும் வேண்டும் என்று பிதாவாகிய தேவன் விரும்புகின்றார். ஏனென்றால் விசுவாசத்தின் வழியாகவே கிருபையினாலே நாம் சகலத்தையும், நம்மை வழி நடத்த ஆவியானவரையும் எல்லாவற்றிற்கும் மேலாக நித்திய வாழ்வையும் மோட்சானந்தத்தையும் பெற்று கொள்ள முடியும், கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள் ( எபே. 2: 8 ) என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. இத்தகைய விசுவாசத்தை நாம் பெற்று கொள்ளவும் நிலைத்திருக்கவும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி நாம் தெளிவாக அறிந்தும் புரிந்தும் கொள்ள வேண்டும், நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன் என்று பவுல் ( 2 தீமோ. 1:12 ) சொன்னதுபோல நாமும் ஆவியோடு மட்டுமல்ல, உண்மையோடும் கருத்தோடும் கர்த்தரை அறிந்து தொழுது கொள்ள வேண்டும்.

இத்தகைய மெய்யான விசுவாசத்தை பற்றி அறிவில்லாதிருப்போமானால் தேவனுடைய கோபம் நம் மேல் நிலை நிற்கும் ( யோ. 3: 35-36). ஆகவே விசுவாசத்தை துவக்குகிறவரும், அதை கடைசி வரைக்கும் நம்மிடம் காக்கிறவருமாய் இருக்கிற நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்வது எப்படி? அவரிலே நிலைத்து இருப்பது எப்படி? அதின் அவசியம் போன்ற இன்னும் அநேக காரியங்களை குறித்து வேத வசனமாகிய வெளிச்சத்தோடு ஆவியானவரின் துணைக்கொண்டு ஆராய்வோம்.

தமிழ்