கர்த்தரை மட்டுமே ஆராதியுங்கள்

  • பிதாவாகிய யகோவாவையே வணங்கவேண்டும் என்று கூறுவது அர்த்தமற்றதும் பிதாவாகிய தேவனின் கோபத்தை நம் மேல் வர வழி வகுக்கும். யகோவாவாகிய இயேசு கிறிஸ்துவையே கர்த்தர் என்று சொல்லி பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படி நாம் வணங்க வேண்டும் (பிலி. 2:0,11). இதுவே நித்திய ஜீவன் (இயேசுவே கர்த்தர்).
  •  மேரி அன்னை, இயேசுவாகிய தெய்வத்தின் அன்னை என்று சொல்லி அவர்களையும், அவருடைய தகப்பனாகிய யோசேப்பையும், அது பிதாவாகிய கோபத்தை நம்மேல் கொண்டுவரும். ஏனென்றால் நமக்கு இயேசு கிறிஸ்துவை தெய்வமாக கொடுத்தது பிதாவாகிய தேவனே (யோ.3:16). ஆகவே இயேசு கிறிஸ்துவை வணங்குவது மட்டுமே நம்மை பரிசுத்தவான்களாக, பரலோகம் சேரக்கூடியவர்களாக மாற்றும்.
  • அதை போலவே இது ஆவியானவரின் யுகம் என்று சொல்லி ஆவியானவரை அழைப்பதும், இயேசு கிறிஸ்துவின் நாமம் இல்லாமல் (அல்லது) உச்சரிக்கப்படாமல், பிதாவாகிய தேவனை வணங்குவது அர்த்த மற்றது. ஏனென்றால் ஆவியானவரை வணங்குவது பிதாவாகிய தேவனின் சித்தம் அல்ல, ஆவியானவரை, நாம் இயேசு கிறிஸ்துவை வணங்குவதன் மூலம் பெற்றுக் கொண்டு இயேசு கிறிஸ்துவின் நாமத்தை பிதாவாகிய தேவனின் மகிமைக்காக உயர்த்துவதே பிதாவாகிய தேவனின் சித்தம் (1 யோ. 16:14). இதை விடுத்து நாம் 'இது ஆவியானவரின் யுகம்' என்று சொல்லி இயேசு கிறிஸ்துவின் நாமம் இல்லாமல் ஆவியானவரை வணங்குவதும் அவரைப் பற்றி பேசுவதும் அர்த்தமற்றது. தேவ கோபாக்கினையை நம் மேல் கொண்டுவரும். (2 யோ. 1:7).

ஆகவே, கிறிஸ்தவர்கள் ஆகிய நாம்

  • இயேசு கிறிஸ்துவை மட்டுமே இறைவனாக, கர்த்தராக பிதாவாகிய தேவனுக்குள் வணங்கி, பரிசுத்த ஆவியானவரை பெற்று பிதாவாகிய தேவனுக்கு பிரியமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் பரலோக ராச்சியம் செல்ல முடியும் என்று வேதம் திட்டமும் தெளிவுமாக கூறுகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மட்டுமே நாம் உயர்த்தி காட்டுவோம்.
  • ஜெபமானாலும், பிரசங்கங்கள் ஆனாலும், பாட்டானாலும் இயேசுவின் நாமம் அதிலே அதிகமாக காணப்பட ஜாக்கிரதை உள்ளவர்களாக இருப்போம். ஏனென்றால் இயேசு இல்லாத ஜெபமும், பாட்டும், பிரசங்கமும் வீணானது.
  • இன்று அனேக கிறிஸ்தவர்கள் தேவன், இறைவன், கடவுள், பராபரன், கர்த்தர் என்று பொதுவான ஒரு பெயரால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அநேகம் தரம் அழைக்கிறார்கள். 'இயேசு கிறிஸ்து' என்ற அந்த உன்னத நாமத்தினாலேயே நாம் இறைவனை அல்லது தேவனை அழைப்போம். இயேசு கிறிஸ்துவை அறிவிப்பதே சுவிசேஷம். இயேசு என்ற நாமமே அல்லாமல் இரட்சிக்கப்படுவதற்கு வேறு ஒரு நாமும் பிதாவாகிய தேவனால் நமக்கு கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்து
  • இயேசுவின் நாமத்தை உயர்த்துவோம், வணங்குவோம், சேவிப்போம். ஏனென்றால், இயேசுவின் நாமம் ஒன்றே. நம்மை பரலோகத்தில் கொண்டு போய் சேர்க்கும் (1 கொரி. 3 : 11), இது மட்டுமே பிதாவாகிய தேவனுடைய சித்தம். இத்தகைய இணையற்ற ஆசீர்வாதத்தை பெற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபையும் ஒத்தாசையும் செய்வாராக, ஆமென்.

இந்தப் இணையதளத்தை முழுமையாக படித்திருப்பீர்கள் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் நம்புகிறேன். இது எனக்கு அருளப்பட்ட அருளின்படி, என் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை, நான் அறிந்து கொண்ட வழி (அல்லது) அறிவு. ஒன்றை மட்டும் நான் இங்கு அழுத்தம் திருத்தமாக சொல்ல விரும்புகின்றேன். இயேசுவே வழி. சத்தியம், ஜீவன், எனவே நீங்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் (அல்லது) கிறிஸ்தவர்கள் அல்லாதவர் களானாலும், கிறிஸ்து உங்களில் முழுமையாக அறிவிக்கப்பட வேண்டும், கிறிஸ்து உங்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும், கிறிஸ்து உங்களில் காணப்பட வேண்டும், கிறிஸ்து உங்களில் முழுமையாக செயலாற்ற வேண்டும் (ரோ. 8:38,39; கொ. 2:6,7) என்று விரும்புகிறேன்

இயேசு கிறிஸ்து தாமே, தம்முடைய பெரிதான கிருபையினாலே, தம்மை அறிகிற அறிவை உங்களுக்கு அருளி, உங்களனைவரோடும் கூட இருந்து, நீங்கள் மோட்சம் செல்லும் வரைக்கும் உங்களை தன் கைகளில் ஏந்தி, வழி நடத்தி ஆசீர்வதிப்பாராக. ஆமென்!.                                              

தமிழ்