ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிமையான நாமத்தினாலே உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தையும் வாழ்த்துதலையும் தெரிவித்து கொள்ளுகிறேன். 1982 ஆம் ஆண்டு முதல் கர்த்தரின் பெரிதான கிருபையினால் அவர்பால் ஈர்க்கப்பட்டேன். அதுமுதல் இன்றுவரை வேதாகமத்தை ஊன்றி வாசித்து வந்த காரணத்தினாலும் நான் கண்ட இந்த உலகில் திருச்சபையிலும் வெளியிலும் ஏற்பட்ட பல கிறித்துவுக்கு எதிரான (அல்லது) வேத வாக்கியங்களுக்கு அப்பாற்பட்ட கொள்கைப்பரப்புகளினாலும் எல்லாவற்றிக்கும் மேலாக பாவியாகிய என்னிலும் வாசமாயிருக்கும் என் அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் நாமம் இந்த உலகேங்கும் ஜொலித்து, இவ்வுலகத்தார் யாவரும் அழிவில்லாத ஆசிர்வாதத்தை பெற வேண்டும் என்ற காரணத்தினாலும் ஒரு சிறிய நூலை நான் எழுத முற்பட்டேன். 2004 ஆம் ஆண்டு எழுத தொடங்கிய நான், 2006 ஆம் ஆண்டு இதை முடித்தேன் என்று சொன்னால் அது ஆண்டராகிய இயேசு கிறித்துவின் சுத்த கிருபை.

என் மனதில் அவர் எழுப்பிய எண்ணற்ற கருத்துகளை ஒருமித்து என்னால் முடிந்தவரை என் சிறிய அறிவுக்கு எட்டியவரை என் அப்பன் இயேசுவை பற்றி எழுதிவுளேன. இயேசுவே இறைவன் அல்லது பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஒரு விளக்கம் போன்ற தலைப்புகள் இதற்கு பொருந்தினாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பே சிறந்தது என்று கருதுகிறேன். இது உங்கள் கிறித்துவ வாழ்க்கைக்கும் வேத வாசிப்புக்கும் பக்தி விருத்திக்கும் மிகவும் பயன்படும் என்று எண்ணுகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்திவுக்கே துதி, மகிமை, கனமும் உண்டாவதாக, ஆமென்.

தமிழ்